சஞ்சய்தத்தின் பரோல் நீட்டிப்பிற்கு நானா படேகர் கண்டனம்..!

90


பாலிவுட்ல கொடிகட்டிப் பறந்த, பிரபல நடிகர் சஞ்சய் தத், ஆயுதங்களை வைச்சிருந்த குற்றத்திற்காக, கைது செய்யப்பட்டு தற்போது புனே சிறையில அடைக்கப்பட்டிருக்கிறாற்.. சினிமாஈள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிய சஞ்சய்தத் இப்ப புனே சிறையில, பேப்பர் பைண்டிங் பண்றது.., அப்புறம் செய்தித் தாள்களை பராமரிக்கிற பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்.

இதுதவிர அவ்வப்போது பரோலிலும் வந்துபோகிறார். அப்படி சமீபத்தில் பரோலி வந்திருக்கும் சஞ்சய் த்த்திற்கு இன்னும் சில நாட்கள் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகரான நானா படேகர். இப்போது மட்டுமல்ல, சஞ்சய் த்த்திற்கு தண்டனை அறிவிக்கப்பட்டபோது கூட அவர் நடிகர் என்பதற்காக எந்தவித சலுகையும் வழங்கப்படக்கூடாது என்று சொன்னவர்தான் நானா படேகர்.

தமிழில் பொம்மலாட்டம் படத்தில் சினிமா இயக்குனராக நடித்தவர் தான் இவர். பல வருடம்ங்களாக பாலிவுட்டில் முக்கியமான நடிகராக கருதப்படும் நானா படேகர், கடந்த 22 வருடங்களில் சஞ்சய் தத்துடன் இணைந்து ஒரு படத்தில் கூட நடித்ததில்லை என்பது ஆச்சர்யமான விஷயம்.. மேலும் இனிவரும் காலத்தில் கூட அவருடன் இணைந்து நடிக்கப்போவதும் இல்லை என்கிறார் நானா படேகர்.

இருவருக்குள்ளும் அப்படி என்ன மனத்தாங்கலோ..? அவர்கள் மட்டுமே அறிந்த ரகசியம்..

Leave A Reply

Your email address will not be published.