கடந்த வருடத்தில் மலையாள சினிமாவின் மிகவும் மகிழ்ச்சியான மனிதர் யாரென்றால் அது பிருத்விராஜ் தான்.. காரணம் ‘செல்லுலாய்டு’, ‘மும்பை போலீஸ்’, ‘மெமோரிஸ்’ என கடந்த வருடம் மலையாள சினிமாவின் மிக முக்கியமான ஹிட் படங்களாக கருதப்படும் மூன்று வெற்றிப்படங்களின் நாயகன் இவர்தான்.
மற்றும் இந்த 2014 குறித்து, பிருத்விராஜ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இப்படி குறிப்பிட்டுள்ளார்.
“சந்தேகமே இல்லாமல் 2013 எனக்கு ஃபெண்டாஸ்டிக்கான வருடமாக அமைந்துவிட்டது. அதேபோல 2014ம் எனக்கு ஒரு பரிசோதனையான ஆண்டாகத்தான் அமையும் என நினைக்கிறேன்.. இந்த வருடம் ‘செவன்த் டே’ என்ற படத்தில் மீண்டும் போலீஸ் ஆஃபீஸராக நடிக்கிறேன். இந்த போலீஸ் கதாபாத்திரத்தில் மிகப்பெரிய ட்விஸ்ட் ஒன்று உண்டு… இதன் படப்பிடிப்பு துவங்கி விட்டது. இடைவெளி எதுவும் இல்லாமல் 40 நாட்களில் முடிந்துவிடும் என நினைக்கிறேன்.
தற்போது தமிழில் வசந்தபாலன் இயக்கத்தில் நடித்துவரும் ‘காவியத்தலைவன்’ படம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் அற்புதமான வரலாற்றுப் படமாக இது உருவாகியுள்ளது. அனேகமாக இந்த வருடத்தின் மத்தியில் இந்தப்படம் வெளியாகலாம்.
மலையாளத்தில் நான் நடித்துள்ள ‘லண்டன் பிரிட்ஜ்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. இது இந்தமாத இறுதியில் தியேட்டருக்கு வரும் என தெரிகிறது. இந்த நேரத்தில் எனது திரையுலக வாழ்க்கையில் எனக்கு பக்கபலமாக நிற்கும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்”