ஒரு இடைவெளிக்குப்பிறகு மீண்டும் தனது ராஜபாட்டையில் அடியெடுத்து வைத்திருக்கும் கவுண்டமணி நடிக்கும் புதிய படத்தின் பெயர் தான் ‘49-ஒ’. நம்புங்கள்.. 74 வயதாகும் கவுண்டமணிதான் இந்தப்படத்தின் கதாநாயகனும் கூட. ஜீரோ ரூல்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தை கௌதம் மேனனின் உதவியாளரான ஆரோக்கியதாஸ் என்பவர் இயக்குகிறார்.
இந்தப்படத்தில் மழைவரம் வேண்டி வருணதேவனை குளிர்விக்கும் விதமாக குழுவினருடன் கவுண்டமணி ஆடிப்பாடும் பாடல் ஒன்று இடம்பெறுகிறது. இந்தப்பாடல் மழைவர உத்திரவாதம் அளிக்கிறதோ இல்லையோ படத்தில் சிரிப்பு மழைக்கு உத்திரவாதம் உண்டு” என்கிறார் இயக்குனர் ஆரோக்கியதாஸ்.
அந்த அளவுக்கு இந்தப்படத்தில் கவுண்டர் உதிர்க்கும் வசனம் ஒவ்வொன்றும் அவரது ரசிகர்களுக்கு பேரானந்தம் தருமாம்.. “49-ஓ அரசியல் படமல்ல, நகைச்சுவை மிளிர சொல்லப்படும் ஒரு ‘புத்திசாலித்தனமான படம்” என்கிறார் ஆரோக்கியதாஸ்.