வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிற படம் ‘பழைய வண்ணாரப்பேட்டை’. படத்தைப் பார்த்தவர்கள் அதில் ஒரு முழுமையான நாயகனாக உருவெடுத்துள்ள நடிகர் பிரஜினைப் பாராட்டத் தவற வில்லை. இதற்கான இவரது உழைப்பை தெரிந்துகொண்டால் நீங்கள் மலைத்து போய்விடுவீர்கள்..
ஆம்.. 5 ஆண்டுகள் விட்டுவிட்டு இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. ஆனாலும் 48 நாட்களில் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட படம். அது 24 மணி நேரத்தில் நடக்கும் கதை என்பதால் ஒரே தோற்றம், ஒரே உடைதான் வர வேண்டும். அதனால் என் எடை 73 கிலோவை 16 ஆண்டுகளாகப் பராமரித்து வந்துள்ளார் பிரஜின். தாடியுடன் இருந்ததால், வேறு படங்களிலும் நடிக்க முடியாது. இப்படி பல சிரமங்களை எதிர் கொண்டு இந்தப்படத்தில் நடித்து முடித்தாராம்.
தற்போது சீனு ராமசாமியின் உதவி இயக்குநர் இயக்கியுள்ள ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ மற்றும் முரளி கிருஷ்ணா இயக்கியுள்ள ‘மிரண்டவன்’ ஆகிய படங்கள் வெளிவரத்தயாராக இருக்கின்றன. தாமிரா இயக்கும் ‘ஆண்தேவதை’ படத்தில் சமுத்திரக்கனியுடன் இணைந்து இரண்டாவது நாயகனாக நடிக்கிறார் பிரஜின்.. ”என்னை டிவியில் அறிமுகப்படுத்தியவர் சமுத்திரக்கனி சார் தான். பேசும் போதே நம்பிக்கை தருபவர் அவர். அவருடன் நடிப்பதில் மகிழ்ச்சி” என்கிறார் பிரஜின்.

Comments are closed.