இரண்டாம் பட இயக்குனர்களின் கலங்கரை விளக்கமாக மாறிய கார்த்தி..!

207

karthi

கார்த்திக்கு இப்படி ஒரு வெற்றி சென்டிமென்ட் இருக்கிறது என்பது அவருக்கே தெரிய வாய்ப்பில்லை தான்.. ஆம்.. சின்ன பட்ஜெட் என்றாலும் தங்களது முதல் படங்களில் முத்திரை பதித்தவர்களுக்கு இரண்டாவது படம் கிடைப்பதற்கு சற்று தாமதம் ஏற்படவே செய்யும்.. ஆனாலும் நல்ல ஹீரோவும், கம்பெனியும் கிடைத்தால் அதிர்ஷ்டம் தான்..

அந்தவகையில் கார்த்தி, இப்படிப்பட்ட முதல் பட இயக்குனர்களின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறார் என்பதே உண்மை.. ‘வெண்ணிலா கபடி குழு’ முடித்துவிட்டு காத்திருந்த சுசீந்திரனுக்கு ‘நான் மகான் அல்ல’ படமும் ‘அட்டகத்தி’ மூலம் கவனம் ஈர்த்த பா.ரஞ்சித்துக்கு ‘மெட்ராஸ்’ படமும் கொடுத்து அவர்களை அடுத்த தளத்திற்கு ஏற்றிவிட்டார்.

இப்போது ‘சதுரங்க வேட்டை’ இயக்குனர் வினோத்தின் முறை.. தனது இரண்டாவது படமாக கார்த்தியின் படத்தைத்தான் இயக்குகிறார் வினோத்… ஸ்டுடியோகிரீன் தயாரிக்கும் இந்தப்படத்தில் ராகுல் பிரீத் சிங் கதாநாயகியாக நடிக்க இருக்கிறாராம். இந்தப்படத்திற்கான போட்டோஷூட் சமீபத்தில் நடைபெற்று உள்ளது.

Comments are closed.