இந்தியில் பிஸியான பிரபுதேவா – தமிழுக்கு வர வாய்ப்பு இல்லை?

39

தமிழில் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல் படங்களை இயக்கிய பிரபுதேவா, அதன்பிறகு இந்திக்குச் சென்று அங்கேயும் மிகப்பெரிய இயக்குனராக ஆகிவிட்டார். கமர்சியல் ரீதியாக அவரோட படங்கள் ஹிட்டாகிட்டு வருவதாலும் அத்துடன் அதிரடி ஆக்‌ஷன், கலக்கலான நடனம், கலாட்டா காமெடி என்று ஒரு கலவையாக இருப்பதாlலும் அவர் இயக்குகிற படங்களில் நடிக்க பாலிவுட் ஹீரோக்கள்ரொம்பவே ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ஹிந்தியில் வாண்டேட், ரவுடி ரத்தோர், தற்போது ரிலீஸாகியுள்ள ராமையா வஸ்தாவைய்யா என ஹாட்ரிக் வெற்றிகளால் பிரபுதேவா தற்போது இந்தியை விட்டு தமிழுக்கு வருவது என்பது கஷ்டம்தான் என்கிறார்கள். மேலும் தற்போது ஷாகித் கபூரை வைத்து ராம்போ ராஜ்குமார் படத்தை இயக்கிவரும் பிரபுதேவா இதை முடித்துவிட்டு அடுத்ததாக அஜய் தேவ்கன் நடிக்கும் படத்தைஇயக்கப்போகிறார்.

இப்போது சமீபத்தில் கிடைத்த ஒரு தகவலின்படி ரிலையன்ஸ் நிறுவனம் தங்களுக்கு ஒரு படத்தை இயக்கித்தரும்படி பிரபுதேவாவிடம் ஒப்பந்தம் போட்டுள்ளார்கள். இந்தப்படத்தில் ஹீரோவாக சைஃப் அலிகான் நடிப்பார் என்று தெரிகிறது. மேலும் இந்தப்படத்தை 2015 ஜனவரியில் வெளிக்கொண்டுவர திட்டமிட்டிருக்கிறார்களாம்.

மு.விஜயகுமார்

Leave A Reply

Your email address will not be published.