
இசைஞானி இளையராஜாவின் பாடல்களை முறைகேடாக பயன்படுத்திவந்த மலேசியாவை சேர்ந்த அகி மியூசிக் நிறுவனத்தின் அகிலன் லட்சுமணன் உட்பட இன்னும் சில நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.
ஆனாலும் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இளையராஜாவை ஏமாற்றும் நோக்கத்துடன் தொடர்ந்து சட்ட விரோதமாக பல்வேறு வழிகளில் இளையராஜாவின் பாடல்களை இவர்கள் விற்று வருகிறார்களாம்.. அதனால் ரசிகர்கள் யாரும் அகி மியூசிக் உள்ளிட்ட நிறுவனங்கள் விற்பனை செய்யும் என் பாடல்களின் சிடிகளை வாங்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு இளையராஜா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
மேலும் தனது பாடல்களின் அதிகாரப்பூர்வ விற்பனை நிறுவனம் குறித்து விரைவில் அறிவிக்கிறேன் என்றும் அதுவரை ஐட்யூனிலும் எனது பாடல்கள் எதையும் தரவிறக்கம் (Download) செய்ய வேண்டாம் என்றும்கேட்டுக்கொண்டுள்ளார்.
Comments are closed.