
‘தகராறு’, ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ என மீடியம் ஹிட்டுகளை கொடுத்த கையோடு ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ என்ற படத்திலும் நடித்து முடித்துவிட்டார் அருள்நிதி. அறிமுக இயக்குனர் ஸ்ரீகிருஷ்ணா இயக்கியுள்ள இந்தப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.
லியோ விஷன் ராஜ்குமார் தயாரித்துள்ள இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து அடுத்தாக ஒரு இன்னும் பெயரிடப்படாத ஒரு திகில் படத்தில் நடிக்கிறார் அருள்நிதி. இந்தமாத இறுதியில் தொடங்கவிருக்கும் இந்தப்படத்தை அஜய் என்பவர் இயக்குகிறார். ஆக்ஷன், காமெடியில் இருந்து திகிலுக்கு மாறும் அருள்நிதி பயம் காட்டுவாரா என பார்க்கலாம்.
Comments are closed.