தமிழில் சமீபகாலமாக பேரரசு டைரக்ஷனில் வெளியான படங்கள் சரியாக போகவில்லை. அதனால் மீண்டும் ஒரு சூப்பர்ஹிட் படம் தந்தே தீருவது என்ற வைரக்கியத்துடன் தற்போது ‘திகார்’ என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி வருகிறார் பேரரசு.
இது மலையாளத்தில் மம்முட்டி நடித்து 22 வருடங்களுக்கு முன் வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘சாம்ராஜ்யம்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வருகிறது. இந்தப்படத்தில் நகரத்தையே நடுநடுங்க வைத்து போலீஸ், சட்டம் என எதையும் மதிக்காமல் வாழும் மிகப் பெரிய டான் அலெக்ஸ்சாண்டர் என்ற வேடத்தில் பார்த்திபன் நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மலையாள இளம் முன்னணி நடிகர் உன்னி முகுந்தன் நடிக்கிறார்.
இதைத்தொடர்ந்து நான் ஈ’ சுதீப்பை வைத்து தமிழ், மற்றும் கன்னடத்தில் இருமொழிப்படம் ஒன்றை இயக்க உள்ளார் பேரரசு. இதுபற்றி சுதீப் சொல்லும்போது “பேரரசும் நானும் இதுபற்றி பேசியுள்ளோம். ஆனால் எதுவும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என்கிறார்.
ஆனால் பேரரசுவோ “இருமொழிகளில் சுதீப்பை வைத்து படம் இயக்குவது கிட்டத்தட்ட உறுதிதான். இந்தப்படம் வழக்கமான என் பாணியிலான கமர்ஷியல் படமாக இருக்கும். ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படப்பிடிப்பை ஆரம்பிக்க முடிவு செய்திருக்கிறேன்” என்கிறார்.