திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, பழனி, திருவண்ணாமலை, போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பேரரசு, அடுத்ததாக நவீன தொழில்நுட்பத்துடன் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் இயக்கும் படத்திற்கு “திகார்” என்று பெயரிட்டுள்ளார்.
காட்சன் பிலிம்ஸ் பட நிறுவனம் மிகப் பிரம்மாண்டமான முறையில் இந்த படத்தைத் தயாரிக்கிறார்கள்.
கதாநாயகனாக முகுந்தன் என்பவர் அறிமுகமாகிறார். கதாநயாகியாக மும்பை மாடல் அழகி அகன்ஷா பூரி அறிமுகமாகிறார். மற்றும் ரியாஸ்கான், எம்.எஸ். பாஸ்கர், பெரோஸ்கான், நியாமத்கான், மும்பை வில்லன் கே.சி. சங்கர், இன்னொரு நாயகனாக கார்த்திகேயன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துபாயில் நடைபெற்றது முகுந்தன் ,அகன்ஷா பூரி பங்கேற்ற “கண்ணே உந்தன் கண்களில் இந்திர ஜாலம் கண்டேன் பெண்ணே! உந்தன் நெஞ்சினில் மாயா ஜாலம் கண்டேன்“ என்ற பாடல்காட்சி மிக பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.