
1. திருவள்ளுவர் திருக்குறள் அரிச்சுவடியை கொடுப்பார்
2. சேகுவேராவுடன் செல்ஃபி எடுக்கலாம்.
3. பாரதியாருடன் செல்ஃபி எடுக்கலாம்.
4. அன்னை தெரசவிடம் ஆசி பெறலாம்.
5. அப்துல்கலாம் பூந்தொட்டி கொடுப்பார்.
6. காந்தியடிகள் ராட்டினத்தை கொடுப்பார்.
இதெல்லாம் என்ன என கேட்கிறீர்களா..? தந்திரக்கலை அருங்காட்சியகம் என கேள்விப்பட்டிருக்கிறீர்களா..? மேலே சொன்ன மகான்கள் எல்லாம் மேலே சொன்ன பொருட்களை நம்மிடம் தத்ரூபமாக நீட்டுவது போன்ற ஓவியங்கள் தான் இந்த அருங்காட்சியகத்தின் ஸ்பெஷல் அம்சம்.
ஓவியர் ஏ.பி. ஸ்ரீதரின் கலைவண்ணத்தில் உருவான இந்தியாவின் முதல் தந்திரகலை அருங்காட்சியகம் துவங்கப்பட்டது. இதற்க்கு கிடைத்த அமோக வரவேற்ப்பினை தொடர்ந்து சென்னை தீவுத்திடலில் அமைந்துள்ள 39வது சென்னை புத்தகக் காட்சியில் இந்தியாவின் இரண்டாவது தந்திரகலை அருங்காட்சியகத்தை அமைத்துள்ளார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்.
இதனை ஒளிப்பதிவாளர் P.C.ஸ்ரீராம் அவர்கள் இன்று காலை 11 மணி அளவில் துவக்கி வைத்தார். இந்த அருங்காட்சியகம் பற்றி கூறும்போது, “தந்திரக்கலை அருங்காட்சியகம் என்பது இன்று சர்வதேச அளவில் புகழ் பெற்று வருகிறது. அதனை இந்தியாவுக்கு ஸ்ரீதர் அறிமுகப்படுத்தியுள்ளார். ஓவியங்களுடன் நம்மை இணைத்து கொண்டு புகைப்படம் எடுத்து கொள்ளும் இதனை சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் கண்டு மகிழ்வார்கள்” என்றார்.
இந்த தந்திரகலை அருங்காட்சியகம் இன்று 01.06.2016 முதல் 13.06.2016 வரை தீவுத்திடலில் அமைந்திருக்கும். இதே போன்று இந்தியாவின் மூன்றாவது தந்திரகலை அருங்காட்சியகம் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள எக்ஸ்ப்ரஸ் அவென்யூ வணிக வளாகத்திலும் இன்று முதல் துவங்கப்பட்டிருக்கிறது.
Comments are closed.