புகைப்பட கலைஞர்களுக்காக திரையிடப்பட்ட ‘நிமிர்’ சிறப்பு காட்சி…!

234

nimir special show

உதயநிதி நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம் ‘நிமிர்’. பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் உதயநிதி ஒரு புகைப்படக்கலைஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மிக யதார்த்தமாக கையாடப்பட்டுள்ள இந்த கதாபாத்திரம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தை பார்த்த சில புகைப்படக்கலைஞர்கள் ‘இப்படம் புகைப்படக்கலைஞர்களுக்கு ஒரு பெரிய பெருமை’ என கூறியுள்ளனர். இதனையொட்டி, சென்னையை சார்ந்த பிரபல புகைப்படக்கலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு ஒரு பிரத்தியேக காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

படத்தை பார்த்த இவர்கள், படத்தையும் உதயநிதியின் கதாபாத்திரத்தையும் அவரது நடிப்பையும் மிகவும் ரசித்து மனதார வாழ்த்தி பாராட்டியுள்ளனர். அவர்களுக்கு பிரத்தியேக நினைவுப்பரிசுகளும் வழங்கப்பட்டன. ஆர்.டி.ராஜசேகர், ராபர்ட், ஜி.பி.கிருஷ்ணா, பாலமுருகன், கார்த்திக் ராஜா, சி.ஜே.ராஜ்குமார், ஆர்ம்ஸ்ட்ரோங், எஸ்.ஆர்.சதீஷ்குமார், கிச்சாஸ் ஆகியோருடன் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமும் இந்த காட்சியில் கலந்துகொண்டு படத்தை ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இது குறித்து இயக்குனர் ப்ரியதர்ஷன் பேசுகையில், “ஒளிப்பதிவில் ஜாம்பவானாக இருந்த வின்சென்ட் மாஸ்டர் அவர்கள் தான் எனது வாழ்வில் மிகப்பெரிய உந்துதலாக இருந்துள்ளார். அவரால்தான் எனக்கு புகைப்பட கலைஞர்கள் மீதும் ஒளிப்பதிவாளர்கள் மீதும் எனது மரியாதை மேலும் கூடியது. ‘நிமிர்’ படத்தை அவருக்கு சமர்ப்பிக்கிறேன். இந்த தருணத்தில், மண் வாசனையின் முக்கியத்துவத்தை எனக்கு உணர்த்திய இயக்குனர் பாரதிராஜாவிற்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறினார்.

Comments are closed.