பார்த்திபன் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று கேட்பவர்களுக்குத்தான் இந்த தகவல். தமிழில் கரு.பழனியப்பன் இயக்கத்தில் ஜன்னல் ஓரம் படத்தில் நடித்துவருகிறார். இது மலையாளத்தில் வெளியான ஆர்டினரி படத்தின் ரீமேக்தான்.
இன்னொரு பக்கம் நேரடி மலையாள படம் ஒன்றிலும் நடிக்கிறார். ஏற்கனவே ‘நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வக’, ‘மேல்விலாசம்’ என இரண்டு மலையாள படங்களில் நடித்துள்ளார் பார்த்திபன். தற்போது நடித்துவரும் படத்தின் பெயர் எஸ்கேப் ஃப்ரம் உகாண்டா.
ராஜேஷ் நாயர் இயக்கும் இந்தப்படத்தில் ரீமா கல்லிங்கல் கதாநாயகியாக நடிக்க முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் பார்த்திபன். உகாண்டாவில் ஒரு இந்தியக் குடும்பத்துக்கு நடக்கும் சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட கிரைம் த்ரில்லர் கதைதான் எஸ்கேப் ஃப்ரம் உகாண்டா.
உகாண்டா தலைநகர் கம்பலாவில் ரெடிமேட் ஆடைகளுக்கான ஷோரூம் வைக்கும் முயற்சியில் ஈடுபடும் ரீமா கல்லிங்கல், கொலை வழக்கு ஒன்றில் சிக்கிக் கொள்கிறார். சிக்கலில் இருக்கும் ரீமாவுக்கு உகாண்டாவில் வசிக்கும் இந்தியரான பார்த்திபன் உதவி கிடைக்கிறது. சிக்கலில் இருந்து இருவரும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதை. படத்தில் பார்த்திபன் கேரக்டர் ரொம்பவும் பேசப்படுமாம்.
உகாண்டா மற்றும் இந்திய சினிமா மார்க்கெட்டை மனதில் வைத்து சுமார் ஒரு மில்லியன் டாலர் செலவில் உருவாகியுள்ள திரைப்படம் ஆங்கிலம், மலையாளம் உட்பட 7 மொழிகளில் வெளியாகிறது. அக்டோபரில் இந்தியாவிலும், உகாண்டாவிலும் படம் வெளியாகிறது. இந்தியாவில் மட்டும் 2300 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என அறிவித்திருக்கிறார்கள்.
Very interesting points you have mentioned,
appreciate it for posting.Raise blog range