மார்ச்-9ல் பண்டிகை ; தேதி குறித்தார் விஜயலட்சுமி..!

262

pandigai

நடிகையாக இருந்த விஜயலட்சுமி இரண்டு ஸ்டெப்ஸ் புரமோஷன் வாங்கி தயாரிப்பாளராக மாறி தயாரித்திருக்கும் படம் தான் ‘பண்டிகை’.. பெரோஸ் இயக்கியுள்ள இந்தப்படத்தின் நாயகன் கிருஷ்ணா.. நாயகி ஆனந்தி.. ஆக்சன் படமாக உருவாகியுள்ள இந்தப்படம் வரும் மார்ச்-9ல் ரிலீஸாக இருக்கிறது. இந்தப்படத்தை விநியோக துறையில் பிரபலமாக விளங்கும் ‘ஆரா சினிமாஸ்’ வெளியிடுகிறது.

கை ஓங்கினால் தான், தான் நினைத்தது கிடைக்கும் என்று எண்ணும் ஒரு கோபமான அனாதை இளைஞன் (கிருஷ்ணா), ஒரு கட்டத்தில் தான் எண்ணியது தவறு என்பதை உணர்ந்து கொள்கிறான். இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அவன் தன் காதலிக்காக (ஆனந்தி) நிழல் உலக தாதாக்கள் நடத்தும் ஒரு சண்டையில் கலந்து கொள்ள நேரிடுகிறது. அதில் இருந்து எப்படி அவன் வெளியே வருகிறான் என்பது தான் எங்களின் ‘பண்டிகை’ படத்தின் கதை.

Comments are closed.