
வேற வழியே இல்லை.. நம் தமிழ்நாட்டில் இருக்கும் பெண்கள் சினிமாவை மட்டும் ஆர்வத்துடன் விரும்பிப்பார்கள். ஆனால் நடிக்க அழைத்தால் ஒரே ஓட்டம் தான்.. அதனால் தான் பக்கத்து மாநிலத்தில் இருந்து மின்சாரத்தை கடன் தந்து உதவுவதுபோல, மலையாள சினிமாவுலகில் இருந்து தங்குதடை இல்லாமல் ஹீரோயின்களை அளித்து தமிழ்சினிமாவுக்கு உதவி வருகிறார்கள்.
லேட்டஸ்டாக மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்திருக்கும் புதிய சேச்சி தான் அனுமோல். மிகவும் அழகான, தைரியமான நடிகை.. இவரது துணிச்சலான நடிப்பை பார்க்கவேண்டும் என்றால் கடந்தவருடம் மலையாளத்தில் வெளியான ‘வெடிவழிபாடு’ படத்தை பாருங்கள்.. கப்சிப் ஆகிவிடுவீர்கள்.
அந்த அனுமோல் தான் தமிழில் தற்போது ‘திலகர்’ என்ற படத்தில் நடித்துவருகிறார். திருநெல்வேலியை கதைக்களமாகக் கொண்டு உருவாகும் இந்தப்படம் கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. தான் கர்ப்பிணியாக இருந்தபோது தன் கணவனைக் கொன்ற எதிரிகளை பழிவாங்குவதற்காக தனது மகனை பழிவாங்கும் நோகத்துடன் வளர்க்கும் பெண்ணைப்பற்றிய கதைதான் இது.
Comments are closed.