கவர்ச்சி படங்கள் வெளியானதில் ஸ்ருதி அதிர்ச்சி.. காவல்துறையிடம் புகார்..!

127

சில காட்சிகளை வீடியோவாக பார்க்கும்போது நொடிப்பொழுதில் கடந்துவிடுவதால் அவ்வளவாக ஆபாசம் தெரியாது. ஆனால் புகைப்படங்களாக் பார்க்கும்போது படு விரசமாக இருக்கும். இதுதான் தற்போது ஸ்ருதிஹாசனுக்கும் நேர்ந்துள்ளது.

ஸ்ருதிஹாசனின் கவர்ச்சிப்படங்கள் சில நாட்களாக இணையதளத்தில் வலம் வருகின்றன. பலர் இது ஸ்ருதிஹாசனே பப்ளிசிட்டிக்காக திட்டமிட்டு பரப்பியது என்கிறார்கள். ஆனால் அப்படியொரு சீப்பான பப்ளிசிட்டிக்கு என்றுமே நான் போகமாட்டேன் என கூறியுள்ளார் ஸ்ருதிஹாசன். இத்தனைக்கும் இந்தப்படங்கள் அவர் ராம்சரணுடன் நடித்த ‘எவடு’ பட பாடலின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

தற்போது அவர் அல்லு அர்ஜூனுடன் நடித்துள்ள ‘ரேஸ் குர்ரம்’ படம் வெளியாகியுள்ள நிலையில், இந்தப்படங்களை வேண்டுமென்றே யாரோ வெளியிட்டு தனக்கு அவப்பெயர் தேடித்தர முயற்சிக்கிறார்கள் என்று நினைக்கிறார் ஸ்ருதி. இந்தப்படங்களை தயாரிப்பாளர் மற்றும் தன் அனுமதியின்றி வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையிடமும் புகார் அளித்துள்ளார் ஸ்ருதி.

Comments are closed.