நவ-22ல் ‘இரண்டாம் உலகம்’ ரிலீஸாவது உறுதி

88

செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா அனுஷ்கா நடிக்கும் படம் இரண்டாம் உலகம். இந்தப் படத்தை தனது கனவுப்படம் என்று சொல்லும் ஃப்ரேம் பை ஃப்ரேமாக செதுக்கியிருக்கிறார் செல்வராகவன். படத்தின் போஸ்ட் புரடக்ஸன் வேலைகள் முடிந்துவிட்ட நிலையில் சென்சார் உறுப்பினர்களுக்கு படம் திரையிடப்பட்டது.

படத்தை பாத்த தணிக்கை குழுவினர் படத்திற்கு எந்தவித ‘கட்’டும் கொடுக்காமல் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். ஆர்யா, அனுஷ்கா இருவரும் தங்களது திரையுலக வாழ்க்கையில் ‘இரண்டாம் உலகம்’ படம் ஒரு மறக்கமுடியாத அனுபவம் என குறிப்பிட்டுள்ளனர்.

படத்தின் பாடல்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஆனால் பின்னணி இசையும் இதர சில பாடல்களும் அனிருத்தின் கைவண்ணம். ஏற்கனவே பல தேதிகள் குறிப்பிடப்படு தள்ளிப்போன இந்தப்படம், இனி எந்தவித மாற்றத்திற்கும் இடம் அளிக்காமல் நவம்பர் 22ஆம் தேதி ரிலீஸ் ஆக இருகிறது.

Leave A Reply

Your email address will not be published.