ஒரு பஸ்ஸில் நடக்கும் நிகழ்ச்சிகளை மையமாக வைத்து வெளியான ‘எங்கேயும் எப்போதும்’ படம் சூப்பர்ஹிட்டானது அனைவரும் அறிந்த விஷயம். அந்தப்படத்தில் சாலை விழிப்புணர்வை மையமாக வைத்து கதையையும் காட்சிகளையும் அமைத்திருந்தார்கள். இப்போது அதேபோல பேருந்தை மையமாக வைத்து தமிழில் ‘ஆறு சக்கர குதிரை’ என்ற படம் உருவாகியுள்ளது.
தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் மக்களின் போக்குவரத்து அவசியத்தை காசாக்க நினைக்கும் சிலர், பர்மிட் இல்லாத பஸ்களை இயக்கி லாபம் பார்க்கும் கதை இது. அதனால் நிகழும் விபரீதங்களை விளக்கும் விதமாக, ஒரு பஸ்ஸில் பயணிக்கும் பல்வேறு தரப்பு மக்களின் கதாபாத்திர படைப்பு தான் இந்த ‘ஆறு சக்கர குதிரை’.
ஜாலியான படமாக உருவாகி இருக்கும் இந்தப்படத்தில் காதல், ஆக்ஷன் எல்லாமே இருக்கும் என்கிறார் இந்தப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கும் செந்தில் சுவாமிநாதன். இந்தப்படத்தில் புதுமுகம் ஜெய்சத்யா கதாநாயகனாக கண்டக்டர் வேடத்தில் நடிக்க, கதாநாயகியாக அபினிதா நடிக்கிறார்.