“இனிமேல் நான் அனுஷா” – பெயரை மாற்றினார் சுனைனா

96

நியுமராலஜிப்படி பெயரை மாற்றிக்கொள்வதுதான் பேஷனாகிவிட்டதே.. இப்போது சுனைனா மட்டும் தன் பெயரை அனுஷா என மாற்றியதில் என்ன அதிசயம் இருந்துவிடப்போகிறது. என்ன சுனைனா பெயரை மாற்றிவைத்துகொண்டாரா? இது எப்போ நடந்தது என பதறவேண்டாம். தாமிரபரணி பானு தன் பெயரை ‘முக்தா எல்சா ஜார்ஜ்’ என மாற்றிக்கொண்டபோதும் நடிகை பூர்ணா தன் பெயரை ‘ஷாம்னா காசிம்’ என மாற்றிக்கொண்டபோதும் நாம் எப்படி ‘ஜஸ்ட் லைக் தட்’ ஆக அந்த விஷயத்தை எடுத்துக்கொண்டோமோ அப்படியே இதையும் எடுத்துக்கொள்வோம்.

சரி எதற்காக இந்த திடீர் பெயர் மாற்றம்? “நான் பிறந்தபோது எனக்கு குறிப்பிட்ட ஒரு எழுத்தில் முடியும்படி பெயர் வைக்குமாறு ஒரு பண்டிட் கூறினாராம். அதனால் எனக்கு சுனைனா என பெயர் வைத்தார்கள். இப்போது ஒரு பண்டிட்டிடம் என் ஜாதகத்தை காட்டியபோது ‘ஷா’ என்ற எழுத்தில் பெயர் முடியும்படி வைத்தால் எனக்கு நல்ல விஷயங்கள் நடக்கும் என என் பெற்றோரிடம் சொல்லியிருக்கிறார். அதனால் அவர்கள் விருப்பத்திற்காக ‘அனுஷா’ என எனக்கு பெயர் வைத்திருக்கிறார்கள். பெயர் மாற்றியதால் எனக்கு ஒன்றும் கஷ்டம் இல்லை.. காரணம் வீட்டிலும் என் நண்பர்களும் என்னை செல்லப்பெயரில்தான் அழைப்பார்கள்” என்கிறார் சுனைனா.. ஸாரி அனுஷா.

பெயர் மாற்றிய நேரம் இவர் அனுஷ்கா ரேஞ்சுக்கு வளரட்டும் என வாழ்த்துவோம். நாம்தான் இனி கொஞ்ச நாட்களுக்கு ‘சுனைனா என்கிற அனுஷா’ என எழுதவேண்டும். பிரச்சனையில்லை. ஆனால் இவரது பெற்றோர் இன்னும் சில மாதங்களுக்கு அடுத்து இன்னொரு பண்டிட்டை தேடிப்போகாமல் இருந்தால் சரி.

Leave A Reply

Your email address will not be published.