முகமூடி, டேவிட், நீதானே என் பொன்வசந்தம் என ஜீவா நடித்த படங்கள் வரிசையாக தோல்வியை தழுவிய நிலையில் தற்போது ஒரு சூப்பர்ஹிட் வெற்றிக்காக காத்திருக்கிறார் ஜீவா. தற்போது ‘வாமனன்’ அஹமது இயக்கத்தில் ‘என்றென்றும் புன்னகை’, மற்றும் ரவி.கே.சந்திரனின் ‘யான்’ என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்தப்படங்களின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில் அடுத்ததாக ‘நீ நல்லா வருவடா’ என்ற ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் ஜீவா. இயக்குநர் கருணாகரனின் உதவியாளர் சந்திரமோகன் இந்தப்படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் தமிழ் சினிமாவின் தற்போதைய மோஸ்ட் வான்ட்டேட் ஹீரோயினான நஸ்ரியா நசீம்.
இந்தப்படம் கிட்டத்தட்ட சிவா மனசுல சக்தி படம் போல காமெடியான படமாக இருக்குமாம். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப்படத்தின் ஷூட்டிங் அக்டோபரில் துவங்குகிறது. இதனைத்தொடர்ந்து சமுத்திரகனி படத்தில் நடிப்பதற்கும் வாய்ப்பு வருவதாகவும், ஆனால் அந்தப்படம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் ஜீவா கூறியுள்ளார்.