சீனா என்றாலே நமக்கு உடனே ஞாபகம் வர்றது தற்காப்புக்கலையான குங்பூதான். நம் இந்திய ரசிகர்கள், குறிப்பாக தமிழ் ரசிகர்கள் இந்த சீனமொழிப்படங்களை விரும்பி பார்ப்பதே இந்த குங்பூ சண்டைக் காட்சிகளுக்காகத்தான். ஜாக்கிசானும் ஜெட்லியும் இன்று உலகம் முழுவதும் சூப்பர் ஹீரோக்களாக ரசிக்கப்படுகிறார்கள் என்றால் அது இந்த குங்பூ சண்டைக்காட்சிகளால் தான்.
அந்த வரிசையில் சீனாவில், 1930களில், புகழ்பெற்று விளங்கிய பிரபலமான குங்பு நிபுணர், ஐபி மேன் என அழைக்கப்படும், விக் சன்னின் வாழ்க்கை வரலாற்றை இப்போது தி கிராண்ட் மாஸ்டர் என்ற பெயரில் படமாக எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள்.
சீனாவில் மன்னராட்சி வீழ்ச்சி அடைந்த காலத்தில் நிகழ்ந்த அரசியல் குழப்பங்கள், போர்கள் ஆகியவற்றின் பின்னணியில் விரியும் இந்த கிராண்ட் மாஸ்டர் படத்தில் டோனி லிங், ஜாங்க் ஜியி, சாங் சென் போன்ற சீன, கொரிய நடிகர்கள் நடித்துள்ளனர்.
பிரபல இயக்குனர், வோங்-கார்-வய் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இவருடைய படங்களைத்தான் நமது தமிழ்சினிமாவில் அடியெடுத்து வைக்கும் பல உதவி இயக்குனர்கள் தங்களுக்கான பாடங்களாகவே பார்க்கின்றனர். சீனா, அமெரிக்காவில், ஏற்கனவே வெளியாகி, வசூலை குவித்துள்ள தி கிராண்ட் மாஸ்டர் படம் விரைவில் இந்தியாவிலும் வெளியாகப் போகிறது. குங்பூ விரும்பிகளுக்கு இந்தப்படம், விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
சின்னமனூர் விஜயகுமார்