தற்போது ‘தலைவா’ படத்தினை முடித்துவிட்டு ‘ஜில்லா’ படப்பிடிப்பில் மும்முரமாக இருக்கும் விஜய், இந்தப்படத்தை தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க முதலில் தீபிகா படுகோனேவிடம் பேசினார்கள். அவரிடம் தேதிகள் இல்லாததால் அதைத் தொடர்ந்து சமந்தாவிடம் பேசினார்கள். விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படம் என்பதால் உடனே தன்னுடைய கால்ஷீட் தேதிகளை ஒதுக்கி கொடுத்து இருக்கிறார் சமந்தா.
ஏற்கனவே ராஜாராணி படத்தில் நடிப்பதற்காக அந்தப்படத்தின் தயாரிப்பாளரான ஏ.ஆர்.முருகதாஸ் சமந்தாவிடம் தேதிகள் கேட்க அந்த சமயத்தில் சமந்தாவால் கால்ஷீட் கொடுக்க முடியாமல் போனது. அதனால்தான் நேரம் பட நாயகி நஸ்ரியாவை ஒப்பந்தம் செய்தார் முருகதாஸ். ராஜாராணி படத்தில் நடித்தது நஸ்ரியாவுக்கு மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட்டாக அமைந்துவிட்டது.
இதைப்பார்த்த சமந்தா இந்தமுறை ஏ.ஆர்.முருகதாஸ், விஜய்யை வைத்து இயக்கும் படத்துக்கு தன்னிடம் கால்ஷீட் கேட்டபோது உடனே சம்மதித்து தேதிகளையும் ஒதுக்கித் தந்துவிட்டார். இந்தமுறையும் சமந்தா மறுத்திருந்தால் அந்த வாய்ப்பு நஸ்ரியாவுக்குத்தான் போயிருக்குமாம்.
ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஷ், என யாரையும் தேடாமல் இந்தப்படத்திற்கு இசையமைக்க கொலவெறி’ புகழ் அனிருத்தை ஒப்பந்தம் செய்துவிட்டார் முருகதாஸ். அதேபோல் முதன்முறையாக விஜய்க்கு நண்பனாக இந்தப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ‘எதிர் நீச்சல்’ சதீஷ். விஜய் படங்களில் மிகவும் பிரம்மாண்ட தயாரிப்பாக இந்தப்படம் அமையும் என்கிறார்கள்.