தந்தைக்கு மகன் ஆற்றும் உதவின்னு வள்ளுவர் சொல்லியிருப்பதை தெலுங்கு சினிமா ஹீரோக்களில் சிலர் தவறாமல் பின்பற்றுகிறார்கள். அந்தவிதமாக டோலிவுட் இளவரசன் மகேஷ்பாபு, தற்போது அவர் நடித்துவரும் 1 நேனொக்கடினே படத்தின் டீஸரை தனது தந்தையான ஆந்திர சூப்பர்ஸ்டார் கிருஷ்ணாவின் பிறந்தநாளான மே-31ஆம் தேதி வெளியிட்டு அவரை கௌரவித்தார்.
நாகார்ஜூனா மட்டும் தந்தையை சந்தோஷப்படுத்த மாட்டாரா என்ன? தற்போது, அவர் நடித்துவரும் ‘பாய்’ படத்தின் ஆடியோ ரிலீஸை தனது தந்தையின் பிறந்தநாளான செப்டம்பர் 20ஆம் தேதி நடத்தலாம் என முடிவு செய்திருக்கிறார். கடந்த வருஷம் ஷீர்டி சாய்னு ஒரு ஆன்மீகப்படம், தமருகம்னு ஒரு ஆக்ஷன் படம் நடித்த நாகார்ஜுனா இந்த வருடம் க்ரீக்வீருடு என்ற ஆக்ஷன் படத்தில் நடித்து, படமும் ரிலீஸாகிவிட்டது. இப்போது அடுத்து எடுத்துள்ள ஆக்ஷன் அவதாரம்தான் பாய்.
வீரபத்ரம் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் மூன்று விதமான கெட்டப்புகளில் நடிக்கிறார் நாகார்ஜூனா. இந்தப்படத்தில் நாகார்ஜூனாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் ரிச்சா கங்கோபாத்யாய். படத்திற்கு இசையமைப்பவர் ஆந்திர சினிமாவின் அதிரடி மன்னன் தேவிஸ்ரீபிரசாத் தான். படத்தை அக்டோபர் 4ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.