மார்ச்-3ல் வெளியாகிறது நயன்தாராவின் ‘டோரா’..!

268

dora 1

நயன்தாரா நடித்து வரும் படங்களில் தற்போது அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் தான் ‘டோரா’.. நேமிசந்த் ஜபக் சார்பாக தயாரிப்பாளர் ஹிதேஷ் ஜபக் மற்றும் இயக்குனர் சற்குணம் ஆகியோரின் தயாரிப்பில் திரைக்கு முற்றிலும் புதியவரான தாஸ் ராமசாமி இயக்கத்தில் இந்தப்படம் உருவாகியுள்ளது..

ஹாரர் த்ரில்லர் வகையை சேர்ந்த இந்தப்படத்திற்கு விவேக் – மெர்வின் இசையமைத்துள்ளனர். இந்தப்படத்தில் அனிருத் குரலில் ‘ரா ரா ரா’ எனும் மிகவும் ஆக்ரோஷமான பாடல் ரசிகர்களின் வரவேற்பை பெரும் என சொல்கிறார்கள் படக்குழுவினர்.

காரணம் தீய சக்திகளை நயன்தாரா எப்படி வெல்கிறரா என்ற காட்சியமைப்பில் உருவாகியிருக்கும் இந்தப்பாடலுக்கு அனிருத்தின் குரலுடன் நயன்தாரா பேசியுள்ள வசனங்களும் வலு சேர்க்கும் விதமாக உருவாக்கி இருக்கிறதாம். சோனி மியூசிக் நிறுவனம் இந்தப்படத்தின் ஆடியோவை கைப்பற்றி உள்ளது. வரும் மார்ச்-3ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாக இருக்கிறது.

Comments are closed.