நட்டிக்கு டைட்டிலாக கிடைத்த ரஜினி டயலாக்..!

212

ketta-paiyan-sir-ivan-firstlook 1

என்றைக்கு நாளை என்கிற படத்தில் ரஜினியின் மேனரிசங்களோடு நடிகராக அறிமுகமானாரோ அன்றிலிருந்து ரசிகர்களின் மனதில் நன்றாக பதிந்துவிட்டார் நட்டி என்கிற நடராஜ்.. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வெளியான ‘சதுரங்க வேட்டை’ படம் அவரை இன்னும் பிரபலமாக்கியது.. தற்போது ரஜினியின் பாடல் வரியான ‘எங்கிட்ட மோததே’ மற்றும் ‘போங்கு’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்..

அடுத்ததாக நட்டி நடிக்கும் படத்திற்கு ‘கெட்ட பையன் சார் இவன்’ என டைட்டில் வைத்துள்ளார்கள். இதுவும் ‘காளி’ படத்தில் ரஜினி பேசிய பேமஸ் டயலாக் தான். அறிமுக இயக்குனர் தீபக் என்பவர் இயக்கம் இந்தப்படத்தில் நட்டி டபுள் ஆக்சன் ரோலில் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

Comments are closed.