நயன்தாரா படத்துக்கு ஜோதிகா வாழ்த்து..!

230

jyothika - nayanthara

ஒரு நடிகை இன்னொரு நடிகையின் படத்திற்கு வாழ்த்து சொல்வதெல்லாம் ரொம்பவே அரிதான விஷயம்.. ஆனால் நடிகை ஜோதிகாவுக்கு அந்த பாகுபாடு எல்லாம் கிடையாது.. மற்றவர்களின் படங்களையும் தனது படம் போல நினைப்பார்.. அதனால் தான், தான் நடித்துள்ள ‘மகளிர் மட்டும்’ பட இசைவெளியீட்டு விழாவில் பேசியபோது நயன்தாரா நடித்துவரும் ‘அறம்’ படத்துக்கும் வாழ்த்து சொன்னார்…

அதற்கு இசையமைப்பாளர் ஜிப்ரானும் ஒரு காரணம்.. ‘மகளிர் மட்டும்’ படத்துக்கு இசையமைத்துள்ள ஜிப்ரான் தான் அறம் படத்திற்கும் இசையமைத்து வருகிறார். இதுபற்றி ஜோதிகா விழாவில் பேசும்போது, “ஜிப்ரான் இந்தப்படத்திற்கு அருமையான இசையைக் கொடுத்துள்ளார். நயன்தாரா நடித்திருக்கும் ‘அறம்’ என்ற பெண்ணை மையப்படுத்திய படத்துக்கு இசையமைக்கிறீர்கள். பெண்களை மையப்படுத்திய கதைக்கு முக்கியத்துவம் அளித்தமைக்கு நன்றி” என குறிப்பிட்டார்.. ஜோதிகாவும் நயன்தாராவும் சந்திரமுகி படத்தில் இணைந்து நடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.