தெலுங்கில் நயன்தாராவுக்கு தடை..?

131

தங்க ஊசி என்பதற்காக அதைவைத்து கண்ணை குத்திக்கொள்ள முடியுமா என்ன..? தயாரிப்பாளர்கள் கோடி கோடியாக கொட்டித்தந்து படத்தை எடுக்கிறார்கள்.. ஆனால் படத்தின் முக்கியமான விழாக்களில் கூட கலந்துகொண்டு படத்தை ப்ப்ளிசிட்டி செய்ய உதவ்வில்லை என்றால் என்ன அர்த்தம்..? அப்படியானால் இது உண்மையிலேயே தவறான ஒரு முன்னுதாரணம் தான்.

நயன்தாராவை முன்வைத்துத்தான் இந்திப்படமான ‘கஹானி’யை ‘அனாமிகா’ என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார்கள். தமிழிலும்கூட வெளியாகிறது. அவர்தான் படத்தின் பிரதான கதாபாத்திரம். அப்படிப்பட்டவர் படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்கு கூட வரவில்லையென்றால் பணம் போட்ட தயாரிப்பாளர்களுக்கு கோபம் வருமா வராதா..?

அதனால் தான் பொறுத்து பொறுத்து பார்த்தவர்கள் இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் முறையிட்டு தெலுங்குப்படங்களில் நயன்தாரா நடிக்க தடைவிதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்கள்.. ‘ஸ்ரீ ராமராஜ்யம்’ படத்திற்கு பிறகு நயன்தாரா தெலுங்கில் அடியெடுத்துவைக்கும் படம் தான் ‘அனாமிகா’.

நயன்தாராவின் மறு பிரவேசத்திற்கு பின்னும் கூட அவர்மீதான ‘கிரேஸ்’ குறையாமல் அவருடன் பல கதாநாயகர்கள் இணைந்து நடிப்பதற்கான போட்டி இருக்கும் வேளையில், நயன்தாரா இப்படி செய்வது சரியா என கேள்வி எழுந்துள்ளது.

Comments are closed.