
தனக்கே தனக்கென்று தன்னை முன்னிலைப்படுத்தி நடிக்க கூடிய பக்காவான கதை ஒன்றை வெகு காலமாக த்ரிஷா தேடிவந்தார். அப்படி ஒரு கதையை இயக்குனர் கோவி சொன்னதுமே அந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உடனே சம்மதம் சொல்லிவிட்டார் த்ரிஷா. ஆச்சர்யமான விஷயமாக படத்தின் பெயரும் ‘நாயகி’ தான்.
த்ரில்லர் வகையைச் சார்ந்த இந்தப்படத்தில் சினிமா கதாநாயகி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் த்ரிஷா. ‘அபியும் நானும்’ படத்தை தொடர்ந்து த்ரிஷாவுடன் இணைந்து இந்தப்படத்தில் நடிக்கிறார் கணேஷ் வெங்கட்ராம். கூடவே கோவை சரளா, ஜெயபிரகாஷ் ஆகியோரும் உன்று.. இந்தப்படத்தின் துவக்கவிழா வரும் வியாழக்கிழமை அன்று பூஜையுடன் துவங்க இருக்கிறது.
Comments are closed.