5-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்த திருக்குமரன் என்டெர்டெயின்மென்ட்..!

253

பொதுவாக தமிழ் சினிமாவில் இயக்குனர்கள்தான் எப்போதும் ட்ரெண்ட் செட்டர்களாக இருப்பார்கள். ஆனால் கடந்த நான்கு வருடங்களாக தனது திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் மூலம் சூப்பர்ஹிட் படங்களை தயாரித்துவரும் சி.வி.குமார், இந்த ட்ரெண்டையே அடியோடு மாற்றியுள்ளார். அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும் என ஆரம்பித்த ராஜநடை இப்போது வரை தொய்வில்லாமல் தொடர்கிறது.

இந்த நிறுவனத்தில் தயாராகும் அல்லது வெளியாகும் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளத்தில் இருக்குமாறு கதைகளை தேர்ந்தெடுத்திருப்பது தான் சிவி.குமாரின் சக்சஸ் பார்முலா. “எனது படங்களின் வெற்றி ரகசியம் என்று எதுவும் இல்லை. ஒவ்வொரு படத்துக்கும் கடுமையாக உழைக்கிறேன். திட்டமிட்டு பணியாற்றுகிறேன்” என்கிறார் சி.வி.குமார். அந்த உழைப்புதான் இன்று அவரது நிறுவனத்தை வெற்றிகரமாக 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்க செய்திருக்கிறது.

Comments are closed.