உண்மையிலேயே இது ஆச்சர்யமான விஷயம்தான். பின்னே, நேற்று மகனுக்கு பிறந்தநாள். இன்று தந்தைக்கு பிறந்தநாள் என்று தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் பிரபல ஹீரோக்களான தந்தையும் மகனும் பிறந்தநாள் கொண்டாடினால் ஆச்சர்யப்படாமல் வேறென்ன செய்வது..?
நேற்று கௌதம் கார்த்திக் பிறந்தநாள் கொண்டாட, இன்று அவரது தந்தை நவரச நாயகன் கார்த்திக் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். நடிகர் முத்துராமனுக்கு மகனாக பிறந்து, பாரதிராஜாவின் அறிமுகமாக அலைகள் ஓய்வதில்லை படம் மூலம் தமிழ்சினிமாவில் நுழைந்த கார்த்திக் சினிமாவில் செய்யாத சாதனைகள் ஏதும் பாக்கியில்லை என்றுதான் சொல்லவேண்டும். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக தனது நடிப்பால் ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கும் நவரச நாயகனுக்கு behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.