கடந்த 2010ஆம் வருடம் இந்தியில் பிரபலமான யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரித்த படம் தான் ‘பேண்ட் பாஜா பாரத்’. ரன்வீர் சிங்,அனுஷ்கா சர்மா நடித்த இந்தப்படத்தை மனீஷ் சர்மா இயக்கியிருந்தார். சுமார் 8 கோடி ரூபாயில் தயாரான இந்தப்படம் 23கோடி ரூபாய் வசூலித்தது. இந்திய திருமணத்தின் பின்னணியில் சுவையாக பின்னப்பட்டிருந்த புதுமையான கதையும் திரைக்கதையும் இந்தப்படத்திற்கு பல விருதுகளை அள்ளித்தந்தது.
இந்தியில் சூப்பர்ஹிட்டான இந்த ‘பேண்ட் பாஜா பாரத்’ திரைப்படம் இப்போது தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் ஹீரோவாக நானி ஒப்பந்தம் ஆகியுள்ளார். அவருக்கு ஜோடியாக வாணிகபூர் என்ற புதுமுகம் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் கோகுல் கிருஷ்ணா இயக்கும் இந்தப்படத்திற்கு தமிழில் ‘ஆஹா கல்யாணம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.