நட்டியின் ‘வாடா மவனே’ படத்துக்கு திரைக்கதை எழுதும் பேரரசு..!

340

natty - perarasu

சதுரங்க வேட்டை படத்தின் வெற்றியை தொடர்ந்து நட்டி எனப்படும் நட்ராஜை தேடி பல வாய்ப்புகள் வந்தாலும் செலக்டிவான படங்களை மட்டுமே ஒப்புக்கொண்டுள்ள அவர் தற்போது ‘போங்கு’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து அவர் நடிக்க உள்ள புதிய படம் தான் ‘வாடா மவனே’..

டைட்டிலே ரணகளமாக இருக்கும் இந்தப்படத்தில் இயக்குனர் பேரரசு தனது கைவண்ணம் காட்டினால் எப்படி இருக்கும்..? ஆம். இந்தப்படத்தின் திரைக்கதை, வசனத்தை பேரரசு தான் எழுதுகிறார்.. படத்தை வினோத் என்பவர் இயக்குகிறாராம். இருந்தாலும் தனது படங்களின் வழக்கமான கமர்ஷியல் அம்சங்கள் எதுவும் இதில் மிஸ்ஸாகாது என்கிறார் பேரரசு.

Comments are closed.