ஜெயம் ரவி படத்தை இயக்க விஜய்க்கு 12 வருடம் ஆனது..!

213

Jayam-Ravi-and-AL-Vijay

கடந்த வருடம் தொடர் வெற்றிப்படங்களாக கொடுத்த ஜெயம் ரவி இந்த வருடமும் வரிசையாக கை நிறைய படங்களை வைத்துள்ளார். தற்போது ‘ரோமியோ ஜூலியட்’ இயக்குனர் லட்சுமண் டைரக்சனில் ‘போகன்’ படத்தில் நடித்துவரும் ஜெயம் ரவி, அடுத்ததாக ஏ.எல்.விஜய் டைரக்சனில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்..

‘இது என்ன மாயம்’ படத்தை தொடர்ந்து தற்போது பிரபுதேவா, தமன்னா நடிக்கும் படத்தை இயக்கிவரும் ஏ.எல்.விஜய், இதை முடித்துவிட்டு ஜெயம் ரவி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளாராம். ஆக்சன் ப்ளஸ் ரொமான்ஸ் படமாக உருவாக இருக்கும் இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட்டில் துவங்கலாம் என தெரிகிறது.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், பிரியதர்ஷனிடம் உதவியாளராக பணியாற்றிவிட்டு இயக்குனராக மாற நினைத்த ஏ.எல்.விஜய் அந்த சமயத்தில் முதலில் இயக்க நினைத்தது ஜெயம் ரவி படத்தை தானாம். ஆனால் அப்படி இப்படி அந்த வாய்ப்பு நழுவிப்போய் இப்போது 12 வருடங்கள் கழித்து ஜெயம் ரவி படத்தை இயக்கும் வாய்ப்பு விஜய்க்கு கிடைத்துள்ளது.

Comments are closed.