இயக்குனர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்த ‘நட்புனா என்னன்னு தெரியுமா’ இசைவிழா..!

283

Natpuna Ennanu Theriyuma Audio Launch

லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகரன் மற்றும் வனிதா பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நட்புனா என்னன்னு தெரியுமா?’. நட்பை மையப்படுத்திய இந்தப் படத்தில், விஜய் டிவி புகழ் கவின் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.

சிவா அரவிந்த் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு தரண் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் வீடியோ சிங்கிள் ட்ராக் வெளியீட்டு விழா ரசிகர்கள் முன்னிலையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதையடுத்து, படத்தின் டீசரை நடிகர் விஷால் வெளியிட்டார். இந்நிலையில், ‘நட்புனா என்னன்னு தெரியுமா?’ படத்தின் ஆடியோ ரிலீஸ், சத்யம் திரையரங்கில் இன்று நடந்தது.

இந்த விழாவில், இசைக் குறுந்தகட்டை இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட, இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், மிஷ்கின், கரு.பழனியப்பன், மோகன் ராஜா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இவ்விழாவில் படத்தின் நாயகன் கவின், நாயகி ரம்யா நம்பீசன், இசையமைப்பாளர் தரண், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

Comments are closed.