சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் ஹாலிவுட்டின் பிரமாண்டமான தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து படங்களை தயாரிக்கிறது. அதன் முதல்கட்டமாக இரண்டு நிறுவனங்களும் இணைந்து முண்டாசுப்பட்டி என்ற படத்தை ஆரம்பித்துள்ளார்கள். இதன் படப்பிடிப்பு இன்று சத்தியமங்கலத்தில் துவங்கி நடைபெறுகிறது. சி.வி.குமார் தயாரிக்கும் ஆறாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.