
பொதுவாக ஆங்கில புத்தாண்டு அன்று (ஜன-1) அது வெள்ளிக்கிழமையே வந்தாலும் கூட நம் தமிழ்சினிமாகாரர்கள் படங்களை ரிலீஸ் பண்ண விரும்புவதில்லை. காரணம் அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர்தான் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு படங்கள் வெளியாகி இருக்கும்.. அதுமட்டுமல்ல, தேர்வு விடுமுறைகள் முடிந்து ஜன-2 பள்ளிகள் திறப்பார்கள்.. அதனால் தியேட்டர்களுக்கு கூட்டம் வருவது கடினம்..
இன்னொரு பக்கம் அடுத்த பத்து நாட்களுக்குள் பொங்கல் ரிலீஸாக படங்கள் ஜன-1௦ஆம் தேதி முதல் வரத்துவங்கும்.. கிறிஸ்துமஸ் படங்களின் டார்கெட்டே இந்த இரண்டு வாரம் தான். அதனால் ஜனவரி-1ல் வெளியாகும் படங்கள் தண்டவாளத்தில் மட்டுமே ஓடும் ரயில் போல அந்த பத்து நாட்களுக்குள் மட்டுமே ஓடியாகவேண்டும் என்பதால் தேவையில்லாமல் யாரும் புத்தாண்டில் படம் ரிலீஸ் பண்ணும் ரிஸ்க்கை எடுப்பதில்லை.
இதற்கு முன் 2௦1௦ல் புத்தாண்டு அன்று இரண்டு படங்கள் வெளியானதோடு சரி.. அதன்பின்னர் ஆறு வருடங்கள் கழித்து இப்போதுதான் வரும் ஜனவரி-1ல் ‘கரையோரம்’, ‘மாலை நேரத்து மயக்கம்’, ‘பேய்கள் ஜாக்கிரதை’, அழகு குட்டி செல்லம் என நான்கு படங்கள் வெளியாகப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளன… கடைசி நேரத்தில் இதில் ஒன்றிரண்டு படங்கள் போட்டியில் இருந்து விலகினாலும் விலகலாம்.
Comments are closed.