சரித்திர படத்தில் மோகன்லால்..?

101


கடந்த 2009ஆம் மலையாளத்திலும் தமிழிலும் வெளியான வரலாற்றுப்படமான ‘பழசிராஜா’விற்கு கிடைத்த வரவேற்பும் வெற்றியும் நாடறிந்தது.. மலையாள எழுத்தாளர்களின் பிதாமகனாக கருதப்படும் எம்.டி.வாசுதேவ நாயர் எழுதிய கதையான ‘பழசிராஜா’வை பிரபல டைரக்டர் ஹரிஹரன் இயக்கியிருந்தார். இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். பழசிராஜவாக மம்மூட்டி நடித்திருந்தார்.. இல்லை இல்லை.. வாழ்ந்திருந்தார் என்றுகூட சொல்லலாம்.

தற்போது எம்.டி.வாசுதேவ நாயர் எழுதிய இன்னொரு நாவலும் திரைப்படமாக உருவாக இருக்கிறது.. எம்.டி.வாசுதேவ நாயர் 1984ல் எழுதி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மற்றொரு நாவல் தான் ‘ரந்தமூழம்’. மகாபாரத கதையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட இந்த நாவல் பீமனின் கண்ணோட்டாத்தில் கதையை விவரிப்பதாக எழுதப்பட்டிருந்தது.

இதில் கதாநாயகனாக நடிப்பது யார் என இன்னும் முடிவாகவில்லை.. அப்படி முடிவானால் மோகன்லாலுக்குத்தான் வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் இன்னொரு புறம் யூகத்தின் அடிப்படையில் பழசிராஜாவில் நடித்த மம்முட்டியே இதிலும் ஹீரோவாக நடிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.