“இஷா தல்வாரை விட்டால் வேறு ஆளே இல்லை” ; மித்ரன் ஜவஹர்..!

237

MeendumoOruKadhalKathai Movie News

தனுஷ் படங்களைத்தான் இயக்குவாரோ என நினைக்கத்தூண்டும் வகையில் வரிசையாக தனுஷ் நடித்த படங்களாக இயக்கிய இவர் இந்தமுறை வால்டர் என்கிற அறிமுக கதாநாயகனை வைத்து படத்தை இயக்கியுள்ளார். மலையாளத்தில் 2012ல் தேசியவிருதுகளை பெற்ற, இளைஞர்களை கிறங்கடித்த பிளாக் பஸ்டர் ஹிட்டான ‘தட்டத்தின் மறயத்து’ படத்தைத்தான் தற்போது தமிழில் ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என்கிற பெயரில் ரீமேக் செய்துள்ளார் இயக்குனர் மித்ரன் ஆர்.ஜவஹர்.

மலையாளத்தில் இதன் ஒரிஜினலில் நடித்த இஷா தல்வார்தான் தமிழிலும் நாயகியாக நடித்திருக்கிறார். ஒரிஜினலில் நடித்தவர்களை எக்காரணம் கொண்டும் பயன்படுத்த கூடாது என்று நினைத்த மித்ரன் நிறைய கதாநாயகிகளை சல்லடை போட்டு சலித்தும் அந்த ‘ஆயிஷா’ கேரக்டருக்கு யாருமே செட்டாகவில்லை.. கடைசியாக இஷா தல்வார் வீட்டு காலிங் பெல்லையே அடித்திருக்கிறார்கள். இன்று நடைபெற்ற இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பிலும் இதை குறிப்பிட்டு இஷாவை பாராட்டினார் மித்ரன்.

நடுத்தர வர்க்கத்து இந்துப்பையன் வசதியான முஸ்லிம் பெண் இருவருக்கிடையே அரும்பும் காதல், இருவரும் ஒன்று சேர வரும் எதிர்ப்புகள், தடைகள் பற்றியது தான் இந்தப்படத்தின் கதை. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பம்பாய்’ போல, ஆனால் வேறு மாதிரியான இந்து-முஸ்லீம் காதல் கதை தான் இது. கலைப்புலி தாணு தான் இந்தப்படத்தை ரிலீஸ் செய்கிறார்..இந்த வாரம் வெளியாக இருந்த இந்தப்படம், ‘கபாலி’ இன்னும் நிறைய அரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் காரணத்தால் வரும் ஆக-12ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

Comments are closed.