திரைப்பட கல்லூரி மாணவரான கமல் என்பவர் இயக்கியுள்ள படம் தான் ‘மறுமுகம்’. டேனியல் பாலாஜி ஹீரோவாக நடிக்க, மற்றொரு ஹீரோவாக நடிக்கிறார் அனூப். ஹீரோயின் பிரீத்தி தாஸ். அகஸ்தியா இசையமைக்கும் இந்தப்படத்தை சஞ்சய் தயாரிக்கிறார்.. இதுவொரு முக்கோண காதல் த்ரில்லராக உருவாகி உள்ளது.
அன்புக்காக ஏங்கும் ஒரு பணக்கார இளைஞன் ஒரு பெண்ணின் மீது காதல் கொள்கிறான். ஆனால் அந்தப்பெண்ணோ, வாழ்க்கையில் முன்னுக்கு வரத்துடிக்கும் வேறு ஒரு பையனிடம் மனதை பறிகொடுக்கிறாள். உள்ளுக்குள்ளே காதலை வைத்துக் கொண்டு, அதை அடைவதற்காக காய் நகர்த்தும் உச்சக்கட்ட த்ரில்லரை சொல்கிறது ‘மறுமுகம்’. இந்தப்படம் வரும் மார்ச்-14ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஸ்டார் ஸ்டுடியோ விஸ்வநாதன் இந்தப்படத்தை வெளியிடுகிறார்.