சூப்பர் ஸ்டார் நடித்துள்ள ‘கோச்சடையான்’ படம் ஏப்ரல்-11ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்ப்புத்தாண்டு ரிலீஸாக மூன்று தினங்களுக்கு முன் வெளியிட முடிவு செய்திருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு புறம் பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் முடிந்து விடுமுறை ஆரம்பிப்பதும் அப்போதுதான்.
அதற்கேற்ற வகையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை வரும் மார்ச்-9ஆம் தேதி நடத்த படத்தின் இயக்குனரான சௌந்தர்யா முடிவுசெய்துள்ளார். அனிமேஷன் படமாக உருவாகி இருக்கும் ‘கோச்சடையான்’ மூலம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி ரசிகர்களுக்கு புதுவிதமான இசை விருந்து அளிப்பார் என நம்புவோம்.