ஷங்கர் டைரக்ஷனில் படம் வந்து விளையாட்டுப்போல இரண்டு வருடம் ஓடிவிட்டது. தற்போது ஷங்கர் இயக்கிவரும் ‘ஐ’ படத்தின் மீதுதான் ரசிகர்களின் முழுக்கவனமும் இருக்கிறது. ஷங்கருடன் இரண்டாவது முறையாக இணைந்திருப்பவர்களில் அர்ஜூன், ரஜினிக்கு அடுத்து விக்ரம் இடம் பிடித்திருப்பதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.
விக்ரம் ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துவரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பை பிப்-25ஆம் தேதியோடு A to Y முடித்துவிட்டதாக தனது சமூக வலைப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் ஷங்கர். A to Y என்றால் ‘Z’..? அது எமி ஜாக்சன் நடிக்க இருக்கும் பாடல் காட்சி மட்டும் தானாம்..
ஏறக்குறைய விக்ரமின் போர்ஷனும் முடிந்துவிட்டது. படத்தின் கிராஃபிக்ஸ், எடிட்டிங், மற்றும் டப்பிங் உள்ளிட்ட பணிகள் ஒருபுறம் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அப்படியென்றால்..? எஸ்.. நீங்கள் நினைப்பது போலவே சம்மர் ரிலீஸாக ‘ஐ’ திரைக்கு வர வாய்ப்பு இருக்கிறது என்று ஆருடம் கூறும் ஷங்கர், இருந்தாலும் பெரிய பட்ஜெட் படம் என்பதால் தயாரிப்பாளர் தான் ரிலீஸ் தேதியை தீர்மானிக்க முடியும் என்று ஒரு பிரேக்கையும் அடித்திருக்கிறார்.