தமிழில் நீண்ட இடைவெளிக்குப்பின் மம்முட்டி நடித்துவரும் படம் ‘பேரன்பு’.. கற்றது தமிழ்’ ராம் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். படத்தின் கதாநாயகியாக அஞ்சலி நடித்துள்ளார்.. கொடைக்கானல் பகுதிகளில் நடைபெற்ற இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
தற்போது இந்தப்படத்தின் டப்பிங் பேசுவதற்காக சென்னை வந்திருந்தார் மம்முட்டி. நுங்கம்பாக்கத்தில் உள்ள ஃபோர் ஃபிரேம்ஸ் தியேட்டரில் மம்முட்டியை டப்பிங் பேச வந்திருந்த தகவல் அறிந்த நடிகைகள் பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் லிசி லட்சுமி ஆகியோர் அவரை சந்தித்து பேசியதோடு ஆர்வமுடன் செல்பியும் எடுத்துக்கொண்டனர்…
Comments are closed.