நடிகர் ஷாமை பொறுத்தவரை, இதுவரை தமிழ் தவிர தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்துவிட்டார். ஆனால் இன்னும் மலையாள படத்தில் நடிக்காதது மட்டும் ஒரு மனக்குறையாகவே அவருக்கு இருந்து வந்தது. அந்தக்குறை இப்போது அவரது நண்பன் ஆர்யாவால் தீர்ந்துள்ளது. ஆம். முதன்முறையாக மம்முட்டி நடிக்கும் ‘தி கிரேட் பாதர்’ என்கிற படத்தில் நடிக்க இருக்கிறர் ஷாம்..
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்தப்படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கிறார்.. ஷாமுக்கு அவரது பேவரைட் வேதமான போலீஸ் கேரக்டரே தரப்பட்டுள்ளது.. இதுதவிர ஷாமுக்கு நன்கு அறிமுகமான சினேகா இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். அதுமட்டுமல்ல நடிகர் பிருத்விராஜ் தான் இந்தப்படத்தை தயாரிக்கிறார். ஹனீப் அதேனி என்கிற புதுமுகம் இந்தப்படத்தை இயக்குகிறார்.
Comments are closed.