மட்டன் பிரியாணி விருந்து வைத்து அசத்திய மம்முட்டி..!

171

தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் கடைசிநாள் படப்பிடிப்பின்போதும் மொத்த படப்பிடிப்பு குழுவினருக்கும் தனது செலவில் மட்டன் பிரியாணி விருந்து வைத்து அசத்துவது மம்முட்டியின் வழக்கம்.

ஆனல் தற்போது சலாம் பப்பு டைரக்‌ஷனில் அவர் நடித்துவரும் ‘மங்கிலிஷ்’ படத்தின் படப்பிடிப்பின்போது கடந்த வாரம் ஈஸ்டர் பண்டிகை வந்ததால் அன்றைய தினம் படப்பிடிப்பில் இருந்த அனைவருக்கும் இடையிலேயே ஒரு சிறப்பு விருந்து அளித்து மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திவிட்டார்.

இதற்காக தல்சேரியில் இருந்து ‘தம்’ பிரியாணி செய்வதில் ஸ்பெஷலிஸ்டான ஒருவரை அழைத்துவந்து படப்பிடிப்பு தளத்திலேயே வைத்து தயார் செய்து சுடச்சுட பரிமாறி அசத்தியிருக்கிறார்.

Comments are closed.