நாகார்ஜூனா படத்தில் நடிக்கிறார் அமிதாப்..!

176

மாதவன் நடித்த ‘யாவரும் நலம்’ என்ற த்ரில்லர் படத்தை இயக்கியவர் டைரக்டர் விக்ரம் கே.குமார். சிம்பு, த்ரிஷா நடித்த ‘அலை’ படத்தை இயக்கியவரும் இவர்தான். இவர் தற்போது தெலுங்கில் ‘மனம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

தெலுங்கு சினிமாவின் பிரபல மூத்த நடிகரான(மறைந்த) நாகேஸ்வரராவ், (இந்தப்படத்தில் நடித்த பின் காலமானார்), அவரது மகன் நாகார்ஜூனா மற்றும் பேரன் நாகசைதன்யா என மூன்றுபேரும் சேர்ந்து இந்தப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.. அனேகமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் ஒரேபடத்தில் நடிப்பது இதுதான் சினிமாவில் முதன்முறையாக இருக்கும்.

இதில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக ஸ்ரேயாவும் அவரது மகன் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக சமந்தாவும் நடிக்கிறார்கள். கிட்டத்தட்ட படத்தின் 90 சதவீத வேலைகள் முடிந்துவிட்டன. இந்நிலையில் இந்தபடத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதப் பச்சன் சிறப்புத்தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். இந்த்த்தகவலை அவரே தனது இணையதளத்தில் வெளியிட்டும் உள்ளார்.

Comments are closed.