‘மாயா’ என்கிற வெற்றிப்படத்தை கொடுத்த பொடென்ஷியல் நிறுவனத்தின் அடுத்த படைப்பாக உருவாகி இருக்கும் படம் ‘மாநகரம்’.. புதியவரான லோகேஷ் கனகராஜ் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சந்தீப், ஸ்ரீ, ரெஜினா மற்றும் சார்லி ஆகியோர் நடித்துள்ளனர்.. வரும் மார்ச்-10ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸாகிறது..
பொடென்ஷியல் நிறுவனத்தை பொறுத்தவரை பணமோ அல்லது நடிகர்களின் கால்ஷீட்டோ ஒரு பிரச்சனையாக இல்லை என்கிற நிலையில், படம் ஆரம்பிக்கப்பட்டு இத்தனை நாட்களாக ரிலீசாவதில் ஏன் தாமதம் என இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.
“சின்ன பட்ஜெட் படம் தானே.. அதற்கு ஏன் இவ்வளவு தாமதம் என்கிறார்கள்.. காலமும் சூழலும் தான் காரணம்.. உண்மையில் பெரிய பட்ஜெட்டில் படம் எடுப்பது ரொம்ப ஈஸி.. சின்ன பட்ஜெட்டில் படம் எடுப்பதுதான் கஷ்டமாக இருக்கிறது.. காரணம் குடும்பமாக வருகிறவர்கள் கூட சின்ன பட்ஜெட் படத்திற்கு வரமாட்டேன் என்கிறார்கள்.. அவர்களது இலக்கும் கூட பண்டிகை காலமும் பெரிய படங்களுமாகத்தான் இருக்கிறது.
அதனால் சின்ன பட்ஜெட் படங்கள் ரிலீசாவதற்கு என தோதான நேரம் இருக்கிறது.. அது பெரிய படங்களின் ரிலீஸ் தேதியை பொறுத்தே அமைகிறது. அதற்காக காத்திருந்த நேரத்தில் சில பெரிய படங்களின் ரிலீஸ் தேதி திடீரென மாறுகையில், அதனையொட்டி நாங்களும் எங்களது படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றவேண்டியதாகி விட்டது.” என மிக நீண்ட விளக்கம் ஒன்றை அளித்தார் எஸ்.ஆர்.பிரபு.. ‘ஓ.. இதற்குப்பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கிறதா..?

Comments are closed.