கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழில் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில், கிஷோர் நடிப்பில் வெளியான படம்தான் ஹரிதாஸ். தற்போது இந்தப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரிலீசாக இருக்கிறது. படத்திற்கு ‘மா நானா போலீஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக கிஷோர் நடித்திருந்தார். நல்ல படங்களில்தான் கிஷோர் நடிப்பார்…, அல்லது இவர் நடித்தால் அது நல்ல படமாகத்தான் இருக்கும்… இப்படியொரு ஃபார்முலாவை அண்மைக் காலங்களில் உருவாக்கிய நடிகர் கிஷோராகதான் இருக்கும்.
ஹரிதாஸ் படத்திலும் தனது நடிப்பின் மூலம் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியிருந்தார் கிஷோர். ஆட்டிசம் பாதித்த சிறுவனை மையப்படுத்தி அமைக்கப்பட்டிருந்த இந்தப்படத்தில் கிஷோர் தந்தையாகவும், மாஸ்டர் பிரதீப் ராவத் ஆட்டிசம் பாதித்த சிறுவனாகவும், சினேகா டீச்சராகவும் நடித்திருந்தார்கள்.