காரில் அமர்ந்தபடி 33 நிமிடத்தில் பாட்டெழுதிய நா.முத்துகுமார்..!

228

mel naattu marumakal song

மிகப்பெரிய கவிஞனாகிய னா.முத்துக்குமாரை இழந்து தமிழ் திரையுலகம் கலங்கித்தான் போய் இருக்கிறது.. அவருடன் பணியாற்றிய ஒவ்வொருக்கும் அவரத்து மரணம் எவ்வளவு பெரிய பேரிழப்பு என்பது நிச்சயம் தெரியும்.. அந்தவகையில் அவருடன் பணியாற்றியவர்கள் அவருடனான தங்களது அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகிறார்கள்.

விரைவில் வெளியாக இருக்கும் ‘மேல்நாட்டு மருமகள்’ படத்தின் இயக்குனர் எம்.எஸ்.எஸ்க்கும் அப்படி ஒரு இனிய அனுபவம் நா.முத்துக்குமாருடன் அமைந்ததாம்.

“இந்த படத்திற்காக நா.முத்துக்குமார் அவர்களிடம் ஒரு பாடல் எழுத கேட்டேன்.. அதற்கு அவர் அமெரிக்கா போகிறேன் வந்து எழுதுகிறேன். அவசரம்னா வேறை யாரையாவது எழுதி தரச்சொல்லி வாங்கிக்குங்க பிளீஸ் என்றார். நீங்கதான் எழுதனும்னு வற்புறுத்தினேன். நிலைமையை புரிந்த அவர் அவரது காரில் என்னை அழைத்துச் சென்று 33 நிமிடத்தில் பாட்டெழுதி கொடுத்துவிட்டார். ஓடும் காரிலேயே பாட்டெழுதித் தந்த அந்த நட்பையும், நண்பனையும் இழந்து நிற்கிறது இந்த படக்குழு” என நெகிழ்கிறார் இயக்குனர் எம்.எஸ்.எஸ்..

இந்த படத்தில் ராஜ்கமல் நாயகனாக நடிக்கிறார். பிரான்சில் இருந்து ஆண்ட்ரீயன் என்னும் வெள்ளைக்கார பெண் நாயகியாக அறிமுகமாகிறார்.

Comments are closed.