சுனாமியில் சுருண்ட ஒரு காதல் தான் ‘கயல்’..

249


மெனக்கெடல் என்பது சிலருக்கு அலுப்பான விஷயம். ஆனால் பிரபு சாலமனுக்கு அது சுகமான அனுபவம்.  ‘கயல்’ படத்தின் டப்பிங் பணியில் இருந்தவரிடம் படம் தாமதமாகிறதே என்று கேள்வியை முன்வைத்தால், “சின்ன சின்ன விஷயத்திலும் கவனம் செலுத்துவது அழகான படைப்பை தரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இப்போதுதான் டப்பிங் வந்துருக்கோம். படைப்பில் எனக்கு முழு திருப்தி வரும்போது மக்கள் பார்வைக்கு வரும்” என்கிறார் பிரபுசாலமன்.

“நம் வீட்டிற்குள் 340  சேனல்கள் வருகிறது. பெண்கள் சமயலறையிலிருந்து வந்து அதன் முன் உட்கார்ந்து விடுகிறார்கள். இன்னொரு சாரார் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து விடுகிறார்கள். அவர்களை அங்கிருந்து எழுப்பி தியேட்டருக்கு வர வைக்க வேண்டி உள்ளது.” என்று தன் மேனக்கெடலுக்கும் படம் தாமதமாவதற்கும் காரணம் கூறுகிறார் பிரபு சலாமன்.

“டிசம்பர்  26 அன்று உலகம் ஒரு சோகத்தை சந்தித்தது. அதற்கு முன் தினம் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சந்தோஷம் கூட நிலைக்காமல் பலரின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டது.. அதிலும் கடலோர மாவட்டங்கள் தான் அதிகம் பாதித்தது. அதில் எவ்வளவோ பேர் சொத்து, உறவுகள், உடமைகளை இழந்தார்கள் அதில் தொலைந்து போன ஒரு காதல் தான் ‘கயல்’” என்கிறார் பிரபு சாலமன்.

உங்கள் கதைகளில் நட்சத்திர நடிகர்கள் இருப்பதிலேயே என்று கேட்டால் அதற்கும் பதில் தயாராக இருக்கிறது. “மைனா, கும்கி, கயல் போன்ற என்னுடைய யதார்த்த கதைகளுக்கு நட்சத்திர நடிகர்கள் சரியாக மாட்டார்கள். என்கூடவே பயணமாகிற மாதிரியான நடிகர்கள் தேவைப்பட்டது அதனால் புதுமுகம் தான் சரி”.

Comments are closed.