மகனுக்காக ‘குடும்பத்தை’ தள்ளிவைத்த இயக்குனர்..!

198


இதுவரை தான் இயக்கிய படங்களின் மூலம் குடும்ப பட இயக்குனர் என்கிற அழுத்தமான முத்திரையை பதித்தவர் இயக்குனர் வி.சேகர். அதனால் தான் இவர் தயாரித்து இயக்கிய 17 படங்களும் சென்ஸாரில் எந்தவித தடங்கலும் இன்றி ‘யு’ சர்டிபிகேட் வாங்கின.

ஆனால் தற்போது தனது மகன் கார்ல் மார்க்ஸை ஹீரோவாக்கி இவர் இயக்கியுள்ள படத்தில் குடும்ப பிரச்சனைகளை தள்ளிவைத்துவிட்டு காதல் கதையாக உருவாக்கியுள்ளார்.. கதாநாயகியாக அருந்ததி நடித்துள்ளார்.. இந்தப்படத்தில் விவேக்கும் கருணாஸும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

Comments are closed.